தலைப்பு செய்திகள்

கச்சத்தீவுக்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா?

கச்சத்தீவுக்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா?

உலகின் 71 சதவிகித பரப்பை ஆக்கிரமித்து இருப்பது கடல் பரப்பு. பூமியில் உள்ள நீரில் 97% நீர் கடலில்தான் உள்ளது. இந்தியா மூன்று  பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட தீபகற்பமாக திகழ்ந்து வருகிறது. இதில் அரபிக்கடல், வங்காள விரிகுடா, இலட்சத்தீவு கடல், அந்தமான் கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, கம்பாத் வளைகுடா, மற்றும் பாக் நீரிணை ஆகிய கடல் பரப்புகள் அமைந்துள்ளன. இந்த கடல் பரப்பை சுத்தமாக வைத்திருக்கும் உயிரினங்களில் கடல் ஆமை இன்றியமையாதவை.

உலக பெருங்கடல்களில் ஏழுவகை ஆமைச் சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் இந்திய பெருங்கடல் பகுதியில் மட்டும் பச்சை ஆமை, சித்தாமை, அலுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என ஐவகை ஆமைகள் உள்ளன. காலம் முழுவதும் கடல் நீரிலேயே வசிக்கக் கூடிய ஆமைகள் இனப்பெருக்க காலத்தின்போது மட்டும் கரை பகுதிகளில் வந்து முட்டையிட்டு செல்லுகின்றன. அதிலும் குறிப்பாக உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல கடற்கரை பகுதிகளையே முட்டையிட ஆமைகள் தேர்ந்தெடுக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தமட்டில் கன்னியாகுமரிக்கும், திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதிகளிலும், தனுஷ்கோடி மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளிலும் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. இவ்வாறு பிறக்கும் ஆமை குஞ்சுகள் தாம் பிறந்த இடத்தின் நிலவியல் அமைப்பு, காந்தபுலம், தோற்றம், நறுமணம் ஆகியவற்றை தங்கள் உணர்வில் பதிந்து கொண்டு வளர்ச்சி அடைந்த பின் குஞ்சு பொறிக்க இந்த இடத்தினையே தேர்வு செய்யும் வினோத பழக்கம் கொண்டவை.tortiseamai5002

சாதுவான குணம் கொண்ட ஆமைகள் சுமார் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழ கூடியவை. இவை கடல் பாசிகள், சிறு மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்கின்றன. கடல் ஆமைகள் தங்கள் சுவாசத்தின் போது கடல் நீரை மாசு படுத்தாமல் சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டவை ஆகும். இதனால் ஆமைகளை ‘கடல் சுத்திகரிப்பான்’ என மீனவர்கள் அழைக்கின்றனர். ஆமைக்கு ‘கச்சபம்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆமைகளின் புகழிடமாக கச்சத் தீவு இருந்து வந்தது. இதனால்தான் இந்த தீவு ‘கச்சத் தீவு’ என்று அழைக்கப்படுகிறது.

கடல் நீரை இயற்கையாகவே சுத்திகரித்து தரும் ஆமைகளின் உயிருக்கு தற்போது பல வகைகளிலும் ஆபத்துகள் நேர்ந்து வருகிறது. முட்டையிடும் பருவ காலங்களின் போது கரையை நோக்கி வரும் ஆமைகள் இழுவலையில் சிக்கி உயிரிழப்பதும், கடலில் தூக்கி எரியப்படும் கழிவு பொருட்களாலும், இனப்பெருக்க பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிடபடாத பணிகளாலும் ஆமைகள் அழிந்து வருகின்றன. இந்த அழிவில் இருந்து ஆமைகளை காக்கவே மே -23 -ம் தேதி உலக ஆமைகள் தினமாக கடந்த 2000-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

விகடன் 

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *