தலைப்பு செய்திகள்

வவுனியாவில் மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகள்!

வவுனியாவில் மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகள்!

வவுனியா, மகாரம்பைக்குளம், அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த இணை பிரியா தம்பதிகளான பொன்னையா இராஜகோபால் (வயது 81), இராஜகோபால் நாகம்மா (வயது 72) ஆகிய இருவரும் மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகளாக சென்றுள்ளமை உறவினர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை இரவு கணவரான இராஜகோபால் என்பருக்கு சுகயீனம் ஏற்பட்டமையால் அவரை வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது, கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி நாகம்மா வீட்டில் அதே இடத்தில் விழுந்து உயிரை விட்டார்.

IMG_4312வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட கணவர் சிகிச்சை பெறுவதற்கு முன்னரே மனைவி இறந்த செய்தி கேட்டதும் அவரது உயிரும் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தது.

இவ்வாறு கணவன், மனைவி இருவரும் மரணமாகியுள்ளமை அவர்களது உறவினர்களையும், அயலவர்களையும் வியப்பிலும், ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

IMG_4313

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *