செய்திகள்

வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் துப்பாக்கியுடன் மர்மநபர் நுழைந்ததால் பரபரப்பு

வாஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படைத்தளத்தில் துப்பாக்கியுடன் மர்மநபர் நுழைந்ததால் பரபரப்பு எற்பட்டதால் கடற்படைத்தளக் கட்டிடம் மூடப்பட்டுள்ளது.

தளத்தில் இருக்கும் ராணுவ அதிகாரி ஒருவர் வெளியே யாரோ மோதலில் ஈடுபடும் சத்தம் கேட்டதாகவும், மர்ம நபர் ஒருவர் கத்திக் கொண்டே கடற்படை கட்டிடத்திலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு அதிகாரியோ துப்பாக்கி சத்தமோ, மோதலில் ஈடுபடும் சத்தமோ கேட்கவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படைத்தளம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு வாஷிங்டன் கடற்படைத்தளத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் ஒருவர் 12 பேரை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டது நினைவுகூரத்தக்கது.