செய்திகள்

விக்கெட் எடுக்க அனுபவமே சாதகமாக இருந்தது: ஜாகீர்கான் சொல்கிறார்

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வீரர் ஜாகீர்கானின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக காணப்பட்டது. அவர் 4 ஓவர் வீசி 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதில் ஒரு ஓவர் மெய்டனாக அமைந்தது. மெக்கல்லம் டோனி ஆகியோரது விக்கெட்டைகளையும் அவர் கைப்பற்றினார்.ஆட்டநாயகன் விருது பெற்ற ஜாகீர்கான் தெரிவித்துள்ளதாவது

எனது அனுபவம் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியாக இருந்தது. இந்த அனுபவம் தான் எல்லா வகையிலும் சாதகமாக அமைந்தது. நான் இதை சரியாக பயன்படுத்திக்கொண்டேன். ஆட்டத்தை நிறைவு செய்யும் நிலையில் பெற்ற இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காயம் காரணமாக ஜாகீர்கான் இந்த ஐ.பி.எல். சீசன் தொடக்க ஆட்டங்களில் விளையாடவில்லை. மொத்தம் 6 ஆட்டங்களில் விளையடியுள்ள அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.