விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி அழைப்பு : நாளை கொழும்பு விரைகிறார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் நிமித்தம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவரை சந்திப்பதற்காக நாளை கொழும்பு பயணமாகிறார்.
இனப்படுகொலை தீர்மானம் நேற்றைய தினம் வாடா மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் விக்னேஸ்வரனுக்கு இந்த அழைப்பு ஜனாதிபதியிடம் இருந்து வந்திருக்கிறது.
ஜனாதிபதி இந்தியாவுக்கு வியஜம் செய்யவிருக்கின்ற நிலையில் வடக்கின் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஊடுருவல்கள் பற்றி கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், நேற்றைய தீர்மானம் குறித்த தனது அதிருப்தியை ஜனாதிபதி இந்த சந்திப்பில் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சருடன், வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.