செய்திகள்

விக்னேஸ்வரனுடன் பேசுவதை தவிர்த்துக்கொண்ட ரணில்

வளலாயில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் உரையாடுவதைத் தவிர்த்துக்கொண்டார்.

வணக்கம் தெரிவித்ததைவிட இருவரும் பேசிக்கொள்ளவில்லை என நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் முதலமைச்சருடன் சகஜமான உரையாடியதை காண முடிந்தது.