செய்திகள்

விக்ரமுடன் இரட்டை வேடத்தில் கலக்கும் சமந்தா

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் படம் ’10 எண்றதுக்குள்ள’.

‘ஐ’ படத்தை தொடர்ந்து விக்ரம் இந்த படத்தில் நடித்து வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் திட்டத்தில் படக்குழு இருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தில் விக்ரமுக்கு நேபாள டிரைவர் வேடம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் சமந்தா இரண்டு கெட்டப்களில் நடிக்கிறாராம்.

ஒரு சமந்தா வழக்கமான நகரத்து பெண் வேடத்திலும், மற்றொரு சமந்தா நேபாள கிராமத்து கேரக்டரில் நடிக்கிறாராம். நேபாள பெண் என்பதால் பிரத்யேக மேக்கப்கள் போட்டுக்கொண்டு கண்களை சின்னதாக்கி நடித்துள்ளாராம் சமந்தா.