செய்திகள்

விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அல்ஹைடா சந்தேக நபர் மரணம்

ஆபிரிக்காவில் 1998 இல் இடம்பெற்ற தூதரக குண்டுவெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரியான அல்ஹைடாவை சேர்ந்த அபு அல் லிபி குறிப்பிட்ட தாக்குதல்கள் குறித்த நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாவதற்கு சில நாட்கள் உள்ள நிலையில் மரணமாகியுள்ளார்.
ஈரல்புற்றுநோய் காரணமாக அவர் மருத்துவமனையில் காலமானதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
2013 ம் ஆண்டு அமெரிக்கா லிபியாவில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
1998 இல் கென்யா மற்றும் தன்சானியாவில் இடம்பெற்ற தூதரகதாக்குதல்களில்220 பேர் கொல்லப்பட்டது தொடர்பான ஜனவரி 12 ம்திகதி ஆரம்பமாக இருந்த நிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார்.
அதேவேளை அமெரி;க்கா அப்பாவியொருவரை கைதுசெய்து சித்திவைதை செய்து கொலைசெய்து விட்டதாக லிபியின் மனைவி அமெரிக்கா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
லிபியாவில் கைது செய்யப்பட்ட வேளை அமெரிக்காவால் மிகவும் தேடப்பட்ட மனிதராக அவர் காணப்பட்டார்.மேலும் அவர் தங்கள் நாட்டில்வைத்து கைதுசெய்யப்பட்டது தங்கள் இறமையை மீறும் செயல் என லிபியா மக்கள் சீற்றம் வெளியிட்டிருந்தனர்.
2013 ஒக்டோபர் 5 ம் திகதி லிபியாவில்கைது செய்யப்பட்ட இவரை கப்பலொன்றில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் எப்பிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்