செய்திகள்

விசாரணைக்கென அழைக்கப்பட்ட சரண குணவர்தன எம்பி கைது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சரண குணவர்த்தன விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு  கைது செய்யப்பட்டுள்ளார்.

96 இலட்சம் ரூபா நிதி மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யபட்டுள்ளதுடன் அவரை அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.