செய்திகள்

விசாரணையை மகிந்த, விமல், ஞானசார தேரர் குழப்புகின்றனர்

மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, ஞானசார தேரர் ஆகியோர் தனது கணவர் காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை குழப்பி வருவதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

“பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை மகிந்த ராஜபக்சவும் ஏனையவர்களும், தொடர்ச்சியாகச் சந்தித்து, இந்த வழக்கில் தலையீடு செய்து வருகின்றனர்.

ஞானசார தேரர் எனக்குப் பல தடவைகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதற்குப் பின்னால் யார் இருப்பதென்று தெரியவில்லை.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி , பிரதமர், ஐ.நா மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

n10