செய்திகள்

விசாரணை அறிக்கையை திட்டமிட்டபடி வெளியிட வலியுறுத்தி தமிழ் சிவில் சமூகம் கையெழுத்து போராட்டம்

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவிருந்த இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையம் , ஏற்கனவே திட்டமிட்டபடி அறிக்கையானது மார்ச் மாதம் கொண்டு வரப்பட வேண்டுமெனக் கோரி வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் மபெரும் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் மேற்படி ஆசிரியர் சங்கத்திற்கும் பொது அமைப்புக்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இன்றையதினம் காலை நடைபெற்றது.

இதன் போது ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ள சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதிகள் இதனைத் தொடர்ந்து தாமும் கையெழுத்துப் போராட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் தெரிவித்தாவது.

ஐ.நா.விசாரணையினூடாக நீதியை எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களிற்கு ஐ.நாவின் தற்போதைய அறிவிப்பானது மிகுந்த ஏமாற்றத்தையே அழிக்கின்றது. இதற்கு பல காரணங்களை பலரும் கூறினாலும் ஒட்டுமொத்த தமிழினமும் இந்த நீதியையே கோரி அதனையே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில் ஆசிரியர் சங்கம் ஆரம்பித்துள்ள இந்தப் போராட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதுடன் இதனை வரவேற்கின்றோம். மார்ச்சில் கொண்டுவரப்பட உள்ளதக இருந்த இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அதனை மார்ச்சிலேயே கொண்டு வரப்பட வேண்டுமென்று புலம் பெயர் மற்றும் தமிழக உறவுகள் குரல்கொடுத்து போராட்ங்களை ஆரம்பிபத்துள்ளனர்.

இதனையே கோரும் நாமும் எமக்காக போராட்டங்களை முன்னெடுத்து அறிக்கை வெளி வருவதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு புலம்பெயர், தமிழகம், ஈழத்தமிழினம் இந்த மூன்று தரப்பினர்களும் ஒரே புள்ளியில் ஒன்றாக இணைந்து ஒரே நோக்கில் செயற்பட வேண்டும். இதில் தமிழகம் புலம் பெயர் தேசம் சேர்ந்து செயற்படுகின்ற அதே வேளையில் நாமும் எம்மையுமு; இணைத்துக் கொண்டு அறிக்கை வெளிவரப்பட்டு நீதி வேண்டுமென கோருவோம்.

இதற்கமைய நாம் சார்ந்த தமிழி சிவில் சமூக அமையம் வட கிழக்கு பகுதிகள் முழுவதும் மாபெரும் கையெழுத்துப் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது. எமது நீதியான நியாயமாக கோரிக்கைகளில் நாம் உறுதியாக செயற்பட வேண்டும். எமக்காக யாரும் செயற்படலாம் சில வேளை விட்டும் விலகலாம். ஆனால் யாருக்காகவும் எமது அடிப்படை நலன்களை விட்டுக்கொடுக்ககூடாது.

மேலும் இந்த அறிக்கை பிற்போடப்படுவதற்கு நியாயமான காரணங்கள் எவையும் இல்லை. அவ்வாறு இருக்குமாயின் ஒரேயொரு காரணமே இருக்க முடியும். அதாவது கடந்த கால ஆட்சியிலிருந்த அரசாங்கத்தினால் ஐ.நா வசிhரணையாளர்கள் இங்கு வந்து விசாரணை மேற்கொள்வதற்கு தடங்கல் இருந்தது. ஆகையால் தற்போது ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள புதிய அரசின் அனுமதியுடன் இங்கு வந்து மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்றால் அறிக்கையை பிற்போட முடியும். இதனை விடுத்து பிற்போடுவதில் எந்த நியாயமும் இல்லை. இவ்வாறான நிலையில் இதனை பிற்போடப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்றும் தெரிவித்தனர்.