செய்திகள்

விஜயின் பிறந்த நாளன்று வெளியாகும் புலி?

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி புலி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.