செய்திகள்

விஜய் எப்போது பார்த்தாலும் வயது குறைந்தவராக தெரிகிறார்: ஹன்சிகா

இளையதளபதி விஜயை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவருக்கு வயது குறைந்தது போன்று தெரிகிறது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

வேலாயுதம் படத்தில் விஜய்யை துரத்தி துரத்தி காதலித்தார் ஹன்சிகா. இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து புலி படத்தில் நடித்துள்ளார். சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடித்துள்ளார்.