செய்திகள்

விஜய் நடிக்கும் 58 ஆவது திரைப்படம்: பெயர் ‘புலி’

‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. இருந்த போதிலும் ‘புலி’ எனப் பெயர் சூட்டப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது விஜய்க்கு 58வது படமாகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. விஜய் தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

மாரீசன், கருடா, மறு தீரன் என மூன்று பெயர்களில் எதாவது ஒரு பெயர் வைக்கப்படலாம் என தகவல்கள் வெளிவாகி வந்தன. ஆனால் சிம்புதேவனை நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது இந்த மூன்றுமே இல்லை, வேறு ஒரு பெயர் யோசித்துள்ளோம் என்று கூறினர். இதுகுறித்து ஆராய்ந்த போது படத்திற்கு ”புலி” என்ற தலைப்பு கதைக்கு கச்சிதமாக பொருந்துவதால் அதையே வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

ஆனால் அந்த தலைப்பை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஏற்கெனவே பதிவு செய்து வைத்துள்ளார். இதையடுத்து அவரை சந்தித்து படக்குழுவினர் கேட்ட போது விஜய் படத்திற்கு என்பதால் தருகிறேன் என்று தலைப்பை விட்டுக்கொடுத்தாக கூறப்படுகிறது. விரைவிலேயே படத்தின் தலைப்பு குறித்து அதிகராப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.