Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயிரிகளில் குவாண்டம் பௌதீகத் தாக்கங்களை ஆராய்தல்

உயிரிகளில் குவாண்டம் பௌதீகத் தாக்கங்களை ஆராய்தல்

மருத்துவர் சி. யமுனானந்தா

உயிர் அங்கிகளின் குவாண்டம் பௌதீகம் (Quantum Physics) பற்றிய செல்வாக்கினை ஆராய்தல் எதிர்கால மானிட குல முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகும்.

பல உயிரிகளில் குவாண்டம் பௌதீகப் பொறிமுறைகள் அவதானிக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் முக்கியமானவை.

1) ஒளித்தொகுப்பு – ஒளிக்கற்றைகள் அதாவது போட்டோன்கள், இலைகளில் பச்சையத்தினுள் இலத்திரன்களுடன் மோதுகின்றன. இதன் மூலமே ஒளித்தொகுப்பு நடைபெறுகின்றது. ஒளித்தொகுப்பு அடிப்படையில் குவாண்டம் பௌதீகப் பொறிமுறையே ஆகும்.

2) வலசைப் பறவைகளின் புலப்பெயர்வுக்கும் குவாண்டம் பௌதீகப் பொறிமுறையே விளக்கத்தினை அளிக்கின்றது.

3) எமது உடலின் உடற்றொழிலியல் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது மூளையில் உள்ள பரிவகக் கீழ்பரிவகம் (Hypothalamus) ஆகும். இதன் செயற்பாடு ஒருங்கிணைந்து ஓர் உயிரியல் கடிகாரமாக (Biological Clocks) நடைபெறுவதற்குக் காரணம் குவாண்டம் பௌதீகப் பொறிமுறையே ஆகும்.

4) குவாண்டம் குணப்படுத்தல் (Quantum Healing) முறை ஒலி அலைகளைப் பயன்படுத்தி உடலையும், மனதையும் கட்டுப்படுத்தும் செயன்முறையில் குவாண்டம் பௌதீகப் பொறிமுறை காணப்படுகின்றது.

5) எமது நினைவாற்றலும் விழிப்புணர்வும் குவாண்டம் பௌதீகப் பொறிமுறைக்கு உட்பட்டது.

6) விந்து, சூலுடன் இணையும்போது ஒளிக்கற்றைகள் வெளிப்படுவதும் குவாண்டம் பௌதீகப் பொறிமுறையினை உயிரியில் விளக்குகின்றது.

human sperm

குவாண்டம் இயல்பு (Quantum Superposition) குவாண்டம் உயர்நிலை என்பது பல இடங்களில் ஒரே நேரத்தில் செயற்படுவது. அணுக்களில் சோடியாக இலத்திரன்கள் காணப்படும். தனித்துக் காணப்படும் இலத்திரன் போட்டோன்களின் (ஒளிஅலைகளின்) தாக்கத்தினால் துரித நிலையில் செயற்படும். ஒளித்தொகுப்பின்போது பச்சையங்களில் இவ்வியல்பு அவதானிக்கப்பட்டு உள்ளது. எனவே அணுப்பிளவு, அணுசக்தி உற்பத்தியின் போது சூழலில் ஏற்படும் கதிர்வீச்சுக்கள் அணுக்களின் சோடியற்றுக் காணப்படும். இலத்திரன்களில் தாக்கத்தச் செலுத்தி வெவ்வேறு கோணவேகத்தில் அவற்றினை அதிரச் செய்யும். இது சாதாரண ஒளித்தொகுப்பின் குவாண்டம் பௌதீகப் பொறிமுறையினைப் பாதிக்கும். ஒளித்தொகுப்புப் பாதிக்கப்படல் பூமி வெப்பமடைய ஏதுவாக அமையும்.

அதாவது உலக காலநிலைமாற்றத்திற்கு அணுசக்தியின் கதிர்வீச்சினால் ஏற்படுகின்ற பாதகமான குவாண்டம் இயல்பு, ஒளித்தொகுப்பினைப் பாதிப்பதுவும் ஒரு பிரதான காரணமாக அமையும். ஒளித்தொகுப்பில் குறிப்பாக கடலில் பிளாங்டன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை அணுக்கதிர் வீச்சால் அழிவடையும் அபாயம் உள்ளது. கடலில் மீன்வளம் குன்றவும் அணுக்கதிர்களின் குவாண்டம் உயிரியல் தாக்கம் ஏதுவாக அமையும். இது பற்றிய விழிப்பு மிகவும் இன்றியமையாததாகும். அடுத்து பூகோள வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த அணுக்கருப் பிளவுகள், அனுமின்சக்தி உற்பத்தி என்பன கட்டுப்படுத்தப்படல் மிகவும் முக்கியமானது.

வலசைப் பறவைகளின் புலம்பெயர் பறத்தலுக்கும் குவாண்டம் இயல்பு ஏதுவாக அமையலாம். அணுக்களின் சோடியற்றுக் காணப்படும் இலத்திரன்கள் காந்தப்புலங்களால் பாதிக்கப்படும். புலம்பெயர்பறவைகளின் கண்கள் குறித்த திசையில் பார்க்கும்போது புவிக்காந்தப்புலன்கள் பறவையின் பார்வைப்புலத்தில் உள்ள சுயாதீன மூலகங்களில் இலத்திரன்களில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இதனால் தொடர்ச்சியான இரசாயனத் தாக்கங்கள் ஏற்பட்டு நரம்புக் கணத்தாக்கங்கள் கடத்தப்படும். இது அப்பறவை குறித்த திசையினை நோக்கும்போது தொடர்ந்து நடைபெறும். இது குவாண்டம் திசைகாட்டிப் பொறிமுறை வலசைப் பறவைகளில் செயற்படுவதை உய்த்தறிய உதவும். (Quantum Compass in Migrating birds)

Phenom-Home-bird-flight

Turin எனும் கிறீஸ் ஆய்வாளர் மணநுகர்ச்சியில் குவாண்டம் பௌதீகப் பொறிமுறையினை விளங்கப்படுத்தினார். இதில் நரம்புக்கலங்களில் (Quantum tunneling) நிகழ்வதை எடுத்துக்காட்டினார். இவ்வாறே, மனித உடலின் உடற்றொழிலியல் செயற்பாட்டில் உயிரியல் கடிகாரத்தின் செயற்பாடும் (Biological Clock) குவாண்டம் இயல்பை அடிப்படையாகக் கொண்டது. அடுத்து மூளையின் நுண்ணறிவுச் செயற்றிறனும் குவாண்டம் இயல்பின் அடிப்படையினைக் கொண்டது.

குவாண்டம் குணப்படுத்தல் (Quantum Healing) என்பது ஒலி அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்ட உடல், உள, ஆன்மீக ஆற்றுப்படுத்தல் ஆகும். இது மனிதரின் மூளை, முண்ணான் அடங்கிய மைய நரம்புத் தொகுதியில் வௌ;வேறு நிலைகளில் செயற்படுத்தப்படுகின்றது.

உயிரின் உற்பவமான விந்து சூலுடன் இணையும் கணத்தில் ஒளிக்கற்றைகளின் தோற்றுவாய் மிகவும் அண்மையில் அமெரிக்கவிஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டு உள்ளது. இது உயிரின் பரிமாணத்தில் குவாண்டம் இயல்பின் தாக்கத்தை வெளிப்படுத்திஉள்ளது.

எனவே உயிரியல் விஞ்ஞானம், குவாண்டம் பௌதீகம் இணைந்த துறையின் ஆராய்ச்சிகள் இந்நூற்றாண்டின் விஞ்ஞான முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமையும். இதனை எமது இளம் சந்ததியினர் கருத்திற் கொள்ள வேண்டும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *