செய்திகள்

புலிகளின் பொலிஸ் பிரிவில் பணியாற்றிய காளிமுத்துவின் பரிதாப நிலை

 கலும் மக்ரே- சனல் 4  (தமிழ் வடிவம்- சமகளம் செய்தியாளர்) 

பிரிட்டனிற்கு வருவதற்கு முதல் மிகமோசமான சித்திரவதைகளை அனுபவித்ததாக தெரிவிக்கும் இலங்கையை சேர்ந்து புகலிடக்கோரிக்கையாளரை நாடு கடத்துவதை பிரிட்டன் இறுதி நிமிடத்தில் நிறுத்தியுள்ளது.

அவரது சட்டத்தரணிகள் இறுதிநேரத்தில் தாக்கல் செய்த தடைமனுவை தொடர்ந்தே அவரை நாடு கடத்தும் உத்தரவு நிறுத்தப்பட்டுள்ளது.விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் பணியாற்றிய கண்ணண் காளிமுத்து என்ற நபர் இரண்டு தடவைகள் தற்கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

background2-800x365

அவரை நாடுகடத்தினால் அவரது மனோநிலை மேலும் மோசமடையும்,இதனால் அவர் தற்கொலைசெய்துகொள்ளும் அபாயமுள்ளதாக உளநோய் மருத்துவர் ஓருவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய உத்தரவை தொடர்ந்து அவர் உடனடியாக நாடு கடத்தப்படும் அபாயம் நீங்கியுள்ளது.அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்- இது சில வாரங்கள் நீடிக்கலாம்.

ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தில் உயிர் தப்பியவர் காளிமுத்து-அனேகமானவர்கள் அரச படைகளின் எறிகணை வீச்சு காரணமாகவே கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் மீது மிக மோசமான யுத்தக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மோதலின் போது தனது குடும்பத்தை சேர்ந்த பவரை இழந்த காளிமுத்து,அவர் அரச படையினரிடம் சரணடைந்தவேளை அவரது குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டார்.

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகின்ற போதிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது காளிமுத்துவிற்கு இன்னமும் தெரியாது.அவர்கள் உயிருடன் உள்ளனரா என்பது கூட தெரியாது என்கிறார் அவர். 2009 இல் சரணடைந்த பி;ன்னர் அவர் பல மாதங்களாக இலங்கையின் மிகமோசமான சித்திரவதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

பல வாரங்களாக தான் சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.சகல வகையான வேதனையளிக்க கூடிய சித்திரவதைகளையும் அவர் அனுபவித்துள்ளார். ஓரு முறை படையினர் தனது நெஞ்சில் ஏறி மிதித்ததாகவும்,நிர்வாணமாக்கி சிறிய இருள் நிரம்பிய அறையில் அடைத்ததாகவும்,பல நாட்களாக தனக்கு உணவையோ குடிநீரையோ வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னர் காளிமுத்துவை சந்தித்த நபர் ஒருவர் அவர் மிகவும் பயங்கரமான நிலையிலிருப்பதாக குறிப்பிட்டார்.

Tamil deportee 'Hari'
அவர்மிகமோசமான மன அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். என்னை நேரே பார்ப்பதை கூட தவிர்த்தார். அவரது பாதுகாப்பு குறித்து நான் ஆழ்நத கவலைகொண்டுள்ளேன் என அந்த பெண்மணி தெரிவித்தார்.

அச்சம்தரும் நினைவுகள்
காளிமுத்து தனது கடந்த காலம் குறித்த நினைவுகளின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை, அவர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்.தனக்காக தனது மகனும் மனைவியும் அழுவதை தன்னால் கேட்க முடிவதாக நினைத்து அவர் கவலைப்படுகின்றார் என்றார் அந்த பெண்மணி.

பல நாட்கள் இரவில் உறக்கத்திலிருந்து கண்முழித்து அவர் அலறுவார்,சித்திரவதையிலிருந்து உயிர்தப்பியவர் என்பதால் தான் இன்னமும் அங்குள்ளதாக நினைத்து அவர் அச்சப்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். சீருடை அணிந்த நபர்களை பார்த்து அவர் அச்சமடைகின்றார்,வயர்களை தவிர்த்துக்கொள்கிறார், தான் இன்னமும் கண்காணிப்பின் கீழேயே உள்ளதாக கருதுகின்றார்,இவ்வாறான நபர் ஓருவரை பலவந்தமடாக நாடுகடத்துவதற்கு பிரிட்டன் சிந்தித்தது என்பதை நம்பமுடியாமலுள்ளது. இது வெட்கக்கேடான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பரில் காளிமுத்து தற்கொலைசெய்துகொள்ள முயன்றார்,அவரை நபர் ஓருவர் காப்பாற்றி மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றார்.காளிமுத்துவின் சட்டதரணிகள் சார்பில் அவரை இருதடவைகள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய மருத்துவர்கள் அவர் மரணத்தை தழுவ விரும்பும் தெளிவான நோக்குடனேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றனர்.

அவர் தற்போது மிகவும்மோசமான நிலையிலுள்ளார்,அவர் எப்போதுவேண்டுமானாலும் தற்கொலைசெய்துகொள்ளலாம்,நாடுகடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவரது நிலை இன்னமும் மோசமாகியுள்ளது.என அந்த மனநலநிபுணர் தற்போது தெரிவித்துள்ளார். அவர் நாடு கடத்தப்பட்டால் அவரது நிலை இன்னமும் மோசமடையும்,அவர் தற்கொலை செய்துகொள்வார் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

நாடுகடத்துவதை இடைநிறுத்தும் முடிவை வரவேற்றுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் அங்கு தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவார் என்ற விடயத்தை கருத்திலெடுக்காததற்காக அரசாங்கத்தை சாடியுள்ளார். இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது என்பதற்காக காளிமுத்து போன்ற பின்னணியை கொண்டவர்கள் சித்திரவதை செய்ய்படமாட்டார்கள் என கருத முடியாது, இலங்கையில் பொலிஸாரின் மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லை,விடுதலைப்புலிகள் குறித்த மனப்பான்மையும் மாறவில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார்.

சித்திரவதைக்கு எதிரான பிரகடனம்
பிரிட்டன் சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதை சுட்டிக்காட்டும் பிரட் அடம்ஸ்,இலங்கையில் மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளது என்கிறார். விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களை சித்திரவதை செய்வதை முடிவிற்குகொண்டுவந்துள்ளதை இலங்கை அரசாங்கம் நிரூபிக்கும் வரை காளிமுத்துவை போன்ற பின்புலத்தை கொண்டவர்களை திருப்பியனுப்புவதை பிரிட்டிஸ் அரசாங்கம் தடைசெய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

காளிமுத்து தனது எதிர்காலம் குறித்த விசாரணைக்காக சிலவாரங்கள் காத்திருக்கவேண்டியிருக்கும். எனினும் அவரது வழக்கு மிகவும் தெளிவானது அவர்இலங்கைக்கு அனுப்பினால் அது நீதிக்கு கிடைத்த பெரும் தண்டனை என்கின்றனர்.