செய்திகள்

விடுதலைப் புலிகளைத் தடை செய்யுங்கள்: ஐரோப்பிய ஒன்றியத்திடம் ரணில் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளை இயக்கத்தைத் தடை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எழுத்து மூலம் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தியமை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தாம் இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்க உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு ஐக்கிய நாடுகள் உயர் பிரதிநிதி பெட்ரிக்கா மொஹாரினிவிடம் ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்ளார்.

எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்து முடக்கம் தற்காலிக அடிப்படையில் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. புலிகளின் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு தடையை நீக்குவதற்கு சாதகமாகச் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.