செய்திகள்

விடுதலையான ஜோன் நேற்று வீடு திரும்பினார் : மற்றைய கைதிகள் அவரை மறியாதையுடன் கவனித்தார்களாம்

நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சிறைச்சாலையிலிருந்து நேற்று வீடு திரும்பினார்.

குருநாகலை நீதிமன்றத்தினால் நேற்று முன் தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட அவர் நேற்றைய தினம் கெழும்பு விளக்க மறியல் சிறைச்சாலையிலிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் என்றோ ஒருநாள் உண்மை வெற்றிப்பெறும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறைச்சாலைக்குள் மற்றைய கைதிகள் தன்னை சிறப்பாக கவனித்தாகவும் இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ச.தொ.ச நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அவர் குருநாகல் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.