செய்திகள்

விடுதியில் தம்பதியர் மர்ம மரணம்: உறவினர் வந்த பின்பே பிரேத பரிசோதனை

வெள்ளவத்தையில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியத் தம்பதியின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனையை அவர்களின் உறவினர்கள் வருகையின் பின்னர் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. வெள்ளவத்தை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து, சந்தேகத்திற்கிடமான நிலையில் உயிரிழந்த இந்தியத் தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலங்கள் மீட்கப்பட்டதுடன், 31 மற்றும் 27 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.