செய்திகள்

விடுவிக்கப்பட்ட காணிகளை துப்புரவு செய்ய உதவி வழங்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை

வலி.கிழக்கிலுள்ள வளலாய் கிராமத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் தமது காணிகளை பார்வையிட அனுமதியளிக்கப்பட்ட மக்களை வடமாகாண முதலமைச்சர் தலைமையில் மாகாண அமைச்சர்களும் அவைத்தலைவரும் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுடைய தேவைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

குறித்த பகுதிகளுக்கு சென்ற முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் உரையாடியபோது, தங்கள் காணிகளை துப்புரவு செய்தவற்கான வசதிகளையும் ஏற்படுத்தி தருவதுடன் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் தமக்கான அரைநிரந்தர வீடுகளைப் பெற்றத்தருமாறம் முதலமைச்ரசிடம் கோரி;கை விடுத்தனர்.

மேலும் குறித்த பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்க்ள தமது சொந்த இடத்திலேயே தொழில் செய்வதற்கான வழிவகைளை செய்து தருமாறும் தமது காணிகளில் உள்ள மண் அணைகள் மற்றும் முட்கம்பி வேலிகளை அகற்றித்தருமாறும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தாங்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கடல்வழியாக வந்து பார்த்தபோது இருந்த வீடுகள் அதன் பின்னர் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் முதலமைசரிடம் சுட்டிக் காட்டினர்.