செய்திகள்

விடுவிக்கப்பட்ட வலி. வடக்கு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட சுரேஷ் பிரேமசந்திரன்!

வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கடந்த 25 வருடகாலமாக 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. அதில் கடந்த 11 ஆம் திகதி 590 ஏக்கர் நிலப்பரப்பு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது.

அவ்வாறு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களையே இவர்கள் நேற்றையதினம் சென்று பார்வையிட்டுள்ளனர். அத்துடன் அங்கு துப்பரவு பணிகளில் ஈடுபட்டு இருந்த காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடி, அவர்களது பிரச்சனைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்.