செய்திகள்

விண்ணியற்பியல் அற்புதமான ஈர்ப்பு அலைகள் பூமியில் மனித வாழ்வுக்கு உறுதுணையாகும் விந்தை

மருத்துவர் சி.யமுனாநந்தா

விண்ணியற்பியல் நிகழ்வுகள் பூமியில் உயிர்களின் ஆக்கக்கூற்று மூலக்கூறுகளின் உருவாக்கத்தில் பங்களிப்பதனை தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். பூமியில் அணுக் கருச்செயற்பாட்டில் ஈர்ப்பு அலைகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. விண்ணில் நியூட்ரன் நட்சத்திரங்கள் மொத்தல் அடையும் போது உருவாகும் ஈர்ப்பு அலைகள் பூமியில் அயடீன், புரோமின் அணுக்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது.

இரண்டு நியூட்ரன் நட்சத்திரங்கள் ஒன்றினைந்து ஒடுங்கி அழியும் போது சக்தியானது ஈர்ப்பு அலைகளாகக் காணப்படும்.

மனிதன் உட்பட முலையூட்டிகளின் உடற்றொழிலியல் அமைப்பில் அயடீன் மூலகமும் புரோமின் மூலகமும் இன்றியமையாதவையாகும். தைரொயிட் ஓமோனில் அயடீனும் கொலாயன் இழையங்களில் புரோமினும் ஆக்ககூற்று மூலகங்களாகக் காணப்படுகின்றன. மனித உடற்கூற்றில் ஐதரசன், காபன், ஒட்சிசன் உட்பட 25 அத்தியாவசியமான மூலகங்கள் காணப்படுகின்றன.

அணு எண் 35இற்கு உட்பட்ட அதாவது இரும்பினை விட இவேசான அணுக்கள் சுப்பநோவா நட்சத்திரங்கள் அழியும் போது பிரபஞ்சத்தில் காழப்படும்.

தோரியம், யுரேனியம் என்பன பூமியில் மனித வாழ்வுக்கு மறைமுகமாக உதவுகின்றது. பூமியில் உள்ளோட்டில் உள்ள தோரியம், யுரேனியம் போன்ற பார உலோகங்களின் கருக்காழல்கள் ஈர்ப்பு அலைகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இவற்றின் கருச்சக்தி மாற்றங்கள் புவியின் உள்ளோட்டில் உள்ளே நிகழ்வதால் புவித்தட்டுக்கள் நகர்கின்றன. புவித்தட்டுக்களின் நகர்வுகளே  பூமியில் அமிழ்ந்துள்ள காபன்களை வளிமண்டலத்திற்கு வெளிக்கொணர உதவுகின்றது. இக்காபன்கள் வளிமண்டலத்தில் நீருடன் தாக்கமடைந்தும் சிலிக்கேற்றுக்களுடன் தாக்கமடைந்தும் பூமியின் வளிமண்டலமானது பச்சைவீட்டுத்தாக்கத்தால் அற்றுப்போகாது பாதுகாக்கின்றது.

வேகமான நியுட்ரோன் உள்வாங்கல் பொறிமுறையே (Rapid Neutron Capture Process –                 r-process) பார உலோகங்கள் தேய்வடைந்து போகாது பேண உதவுகின்றது. குறிப்பாக பூமியில் இரும்பினை விட அணுத்திணிவு கூடிய மூலகங்கள் நிலைபேறுடையதாக அமைவதற்கு அதுவே காரணமாகும். அன்றேல் வெள்ளிக் கிரகம் போல் பூமியும் உயிர் சாகியம் வாழ முடியாதவாறு வறிதாகிவிடும்.

சுப்பநோவா நட்சத்திரங்கள் செலயலிழக்கும் போது ஒரு கன சென்றிமீற்றர் கனவளவில் ஒருமில்லியன் கெல்வின் வெப்பநிலையில் பத்தின் இருபத்தினான்காம் அடுக்கு நியுப்ரோன்கள் பார உலோக அணுக்களாக மாற்றமடைகின்றன.

புவியில் மனித வாழ்வுக்குத் தேவையான புரோமின், கடோலினியம், தோறியம், யுரேனியம், மொலித்தனம், கட்மியம் என்பவற்றில் 96% பாத்திரமாக வேகமான நியூட்றன் உள்வாங்கும் பொறிமுறையே அமைந்துள்ளது.

வேகமான நியூட்ரன் நட்சத்திரங்கள் உள்வாங்கும் பொறிமுறை சுப்பநோவா நட்சத்திரங்கள் ஒடுங்கும் போது அவற்றின் வெப்ப அனுக்கருச்சக்தி மாற்றமடைவதால் ஏற்படுகின்றது. இரண்டு நியூட்டன் நட்சத்திரங்கள் இணையும் நிகழ்வு கிலோ நோவா எனவழைக்கப்படுகின்றது. ஆவ்வாறு பின்னல் வடிவில் இரண்டு நட்சத்திரங்கள் இணைதல் ஈர்ப்பு அலைகளினால் ஏற்படுகின்றது. இதன் போது வேகமான நியூட்ரன் உள்வாங்கும் பொறிமுறை நிகழ்கின்றது.

நட்சத்திரச் சோடிகள் ஒன்றை ஒன்று நோக்கிப் பின்னல் ஒழுக்கில் மில்லியன் வருடங்கள் நெருங்கி வரும் போது ஈற்றில் ஈர்ப்பு அலைகளாகச் சக்தி வெளிப்படுகின்றது. இவ்வாறான நிகழ்வுகளில் ஒன்றினை ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுமைய ஈர்ப்பு அலை நோக்கி நிலைகள் இரண்டினால் 2017ம் ஆண்டு உறுதி செய்துள்ளனர். இதன் போது காணப்படும் சக்தியின் அளவு ரில்லியன் ரில்லியன் கணக்கான வாற்றுக்கள் ஆகவும் நட்சத்திரங்கள் இணைந்து ஒடுங்கும் இறுதி கணத்தில் சில மில்லிசெக்கன்களில் நிகழ்வதாகவும் அமைகின்றன.

இன்றைய நவீன இயற்பியல் கணடுபிடிப்புக்கள் எமது பண்டைய வானியல் கணிப்புக்களையும் சோதிடத்தில் அமைந்துள்ள கிரகநிலை பலன்களையும் விஞ்ஞான ரீதியில் விளக்கப்படுத்துவதற்கு துணைபோகும்.

மின்காந்த அலைகள், ஒலிஅலைகள், ஈர்ப்பு அலைகள் என்பவற்றின் பிரபஞ்சப்பரிமாணம் சிவநடனத்தை காட்சிப்படுத்துகின்றது. இங்கு ஈர்ப்பு அலைகள் நிலைகளின் நிலைகளை நடராஐப் பெருமானின் தாண்டவத்தின் 108 நிலைகளும் வெளிப்படுத்துகின்றன. சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என சிவசோதியினை வழிபடும் சைவர்களி;ன் மெய்யுணர்வும் பிரபஞ்ச ஈர்ப்பலைக் காழலுக்கு ஏதுவாக இருநட்சத்திரங்களின் பின்னல் ஒழுக்கில் ஒடுங்கும் தன்மையும் இயற்பியல் தத்துவத்தை உணர்த்தி நிற்கின்றது.