செய்திகள்

விதவைப் பெண்களுக்கு சுயதொழில்வாய்ப்பு: கிழக்கு முதலமைச்சர் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் வருமானமின்றி குடும்ப நடவடிக்கைகளுக்கு கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் கணவனை இழந்த விதவைப்பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்புகள் வழங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிழக்கு மாகண முதலமைச்சர் காரியாலயத்திற்கு விஜையம் செய்த UNHCR அதிகாரி கொலாம் அப்பாஸ் மற்றும் UNDP அதிகாரி சுபினாய் நன்டி ஆகியோர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தவேளையில் குறிப்பிட்ட விடையம் சம்மந்தாமக விரிவாக எடுத்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் முதலமைச்சின் செய்லாளர், பிரத்தியேகச் செயலாளர், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.