செய்திகள்

வித்தியாவின் கொலையில் சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சி! ஜே.வி.பி குற்றச்சாட்டு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைப் பயன்படுத்திச் சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புங்குடுதீவில் நடந்த கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டணை வழங்கப்பட வேண்டும்.

புங்குடுதீவில் வித்தியாவின் கொலைச் சம்பவத்தைப் பயன்படுத்திப் சிலர் அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அந்த முயற்சிகளைக் கைவிட்டு வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க உண்மையில் போராடுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ் நகர் நிரூபர்-