செய்திகள்

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதனை தவிர்க்குமாறு பாதுகாக்கப்பட்ட இலங்கைக்கான பிரஜைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் ஏற்பாட்டாளரான விசாகா திலகரட்னவே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. இது தவிர்க்கப்படவேண்டீய விடயமாகும்.
இதேவேளை மாணவியின் கொலைக்கு எதிர்பபு தெரிவித்து எதிர்வரும் 1ம் திகதி கொழும்பு சாரணர் தலைமையகத்திற்கு முன்னால் 1000 மெழுகுவர்த்திகளை ஏற்றும் நிகழ்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.