செய்திகள்

வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் : மகளிர் விவகார அமைச்சர்

மாணவியான வித்தியவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டுமன மகளிர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதினூடாக பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் தெளிவு ஏற்படும்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவென அமைக்ப்பட்டுள்ள விசேட நீதி மன்றத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும். அத்துடன் பொலிஸாரும் சாட்சிகளை துரித கதியில் சேகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.