செய்திகள்

வித்தியா கொலை;சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் 11ஆம் 12 ஆம் இலக்க சந்தேகநபர்களின் விளக்கமறியலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எஞ்சிய இரண்டு சந்தேகநபர்களும் இன்று ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேஷன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 13 ஆவது சந்தேகநபரும் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு வன்புணர்வுக்குட்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

n10