செய்திகள்

வித்தியா கொலை: தப்பி ஓட முயன்ற 10 ஆவது நபர்

மாணவி வித்தியா கொலை வழக்கில் 10 பேர் சம்மத்தப்பட்டுள்ளதகவும் ஏற்கனவே 9 பேர் கைதாகி உள்ள நிலையில் 10 ஆவது நபர் பொலிசாரிடம் சிக்கியபோதிலும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

இவர் தப்பி ஓடுவதற்கு முயன்றதை அறிந்த புங்குடுதீவு மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாருக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்திருந்தவர் என்றும் வித்தியா கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஈடுபட்டார்.