செய்திகள்

வித்தியா கொலை விசாரணை: பொலிஸ் தரப்பு தவறுகள் பற்றிய அறிக்கை கையளிப்பு

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த சிறப்புக் காவல்துறைக் குழுவின் விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலையை அடுத்து, அங்குள்ள மக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் அந்த சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார்.

மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணையில் பொலிஸார் இழைத்த தவறுகளும் இந்த விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகநபரை விடுவித்த மூத்த பொலிஸ் அதிகாரியிடம், இந்த சிறப்பு விசாரணைக் குழு விசாரணைகளை நடத்தவில்லை.

அவரிடம் காவல்துறை தலைமையகம், விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.