செய்திகள்

வித்யா குடும்பத்தினருடன் ஜனாதிபதி சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

வித்யாவின் தாயார் சகோதரன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். யாழ்ப்பாணத்தில் ஆளுநரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஆளுநருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தார்.
04