செய்திகள்

வித்யா கொலைக்கெதிராக மட்டக்களப்பிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், பேரணி (படங்கள்)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.

மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவர்கள் இன்று காலை வாய்களில் கறுப்பு பட்டியணிந்து கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

புங்குடுதீவில் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் காவல்துறை கடினமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இதன்போது மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று புங்கிடுதீவில் இடம்பெற்றது நாளை எங்களுக்கும் நடைபெறலாம் என தெரிவித்துள்ள மாணவர்கள் இவர்கள் மீது சட்டம் ஈவு இரக்கம் காட்டக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இன்னுமொரு தடவை மேலும் ஒரு மாணவி பாதிக்கப்படாத வகையில் வழங்கப்படவேண்டும் எனவும் மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் இதன்போது கவன ஈர்ப்பு பேரணியையும் நடாத்தினர்.

Baticaloa Proetst Vidya  (2) Baticaloa Proetst Vidya  (3) Baticaloa Proetst Vidya  (4) Baticaloa Proetst Vidya  (5) Baticaloa Proetst Vidya  (6) Baticaloa Proetst Vidya  (7) Baticaloa Proetst Vidya  (8) Baticaloa Proetst Vidya  (10) Baticaloa Proetst Vidya  (11)Bati 1 bati 2