செய்திகள்

வித்யா கொலை: சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க உத்தரவு

புங்குடுதீவு மாணவி படுகொலை சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஒரு மாத காலம் தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் விசாரணை அடுத்த மாதம் 13ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இரண்டாவது தடவையாக இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்றிருந்தது. அதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக ஊர்காவல்துறை காவல்துறையினரால் சந்தேக நபர்களிடமிருந்து பெற்றப்பட்ட வாக்குமூலங்கள் தொடர்பில் சர்ச்சை எழுப்;பப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஒரு மாத காலம் தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புங்குடு தீவு மாணவியின் படுககொலை வழக்கு ஏற்கனவே விசேட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் 9 பேரும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடந்து கொண்டிருந்த வேளை இன்றைய தினமும் வித்தியாவின் தாய் மட்டுமல்லாது அவரது சகோதரனும் மயங்கி விழுந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் அமர்வை பார்த்தவாறிருந்த வித்தியாவின் சகோதரன் நெஞ்சை பிடித்தவாறு மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

மயக்கமடைந்த வித்யாவின் சகோதரர்

மயக்கமடைந்த வித்யாவின் சகோதரர்