செய்திகள்

வித்யா கொலை சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்: அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்பு

புங்குடுதீவு மாணவி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கலகம் அடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது, ஏற்பட்ட அசம்பாவிதங்களை கருத்திற்கொண்டு இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குறிப்பாக கடந்த மே மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தின் பின்னரே நீதிமன்றங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் எவரும் கூட்டமாக நிற்கவோ அல்லது தேவையற்ற ரீதியில் திரிவதையோ பொலிஸார் அனுமதிக்கவில்லை.