செய்திகள்

வித்யா கொலை வழக்கு இன்று விசாரணை: ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு

யாழ்.புங்குடுதீவு மாணவியின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்களும் இன்று திங்கள் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.

அதேவேளை கடந்த 20ம் திகதி யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீது கல் வீசி தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 130 பேரில் 43 சந்தேக நபர்களும் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

அதனை அடுத்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் மற்றும் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி என்பவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரு நீதிமன்ற சூழலிலும் பெருமளவான பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று திங்கள் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட இருக்கும் மாணவியின் படுகொலை வழக்கு நாளைய தினமே யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன