செய்திகள்

விநியோகிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றுக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த டிசம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அனைத்து சீல் செய்யப்பட்ட (பயன்படுத்தப்படாத) LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய பழைய பொலித்தீன் சீல் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்களை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவின்படி, தற்போது வீடுகள் மற்றும் விற்பனை முகவர்களிடம் உள்ள பழைய பாதுகாப்பு ​பொலித்தினுடன் கூடிய சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய சிலிண்டர்களை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களாக நாட்டில் எரிவாயு சிலிண்டர்களும், எரிவாயு அடுப்புக்களும் வெடித்துச் சிதறியதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சையாக இது மாறியிருந்தது.சர்வதேச ஊடகங்களும் இந்த வெடிப்புச் சம்பவங்களை முக்கிய செய்திகளாக வெளியிட்டிருந்தன. எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கடுமையாக விமர்சித்திருந்தன.இந்நிலையில், எரிவாயு நிறுவனங்கள் இது தொடர்பில் தற்போது சில மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)