செய்திகள்

விபத்தில் சாரதி உயிரிழப்பு

ஊவ பரணகம, பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் மேலும் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

அதே பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஊவ பரணகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

n10