செய்திகள்

விபத்தில் 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் வியாழன் இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வியாழன் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஜீப் மற்றும் முச்சக்கரவண்டி மோதியே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காத்தான்குடி-06, பிரதான வீதி இரும்புத் தைக்கா பள்ளிவாயல் முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில் காயங்களுக்குள்ளான காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பயணிகள் உட்பட நான்கு பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

n10