செய்திகள்

விபத்துக்குள்ளான முச்சகர வண்டியில் சந்தேகத்திற்கிடாமன சடலம்

வத்தளை பள்ளியாவத்தை பகுதியில் நேற்று மாலை முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகிய நிலையில் அதனுள் இருந்து சந்தேகத்துக்கிடமான சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவருடையதா அல்லது கொலை செய்யப்பட்டு வேறு இடத்திலிருந்து முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சடலமா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அதிக வேகத்தில் பயணித்துள்ள குறித்த முச்சக்கர வண்டி பள்ளியாவத்தை பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது. இதன்போது அதனை நேராக்கி வீதியில் நிறுத்தியுள்ள அதிலிருந்த இருவர் மீண்டும் அங்கிருந்து வேகமாக முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட்ட போது பிரதேச வாசிகள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டிக்குள் சந்தேகத்திற்கிடமான சடலமொன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 இதேவேளை குறித்த விபத்தில் காயமடைந்த இருவர் அந்த முச்சக்கர வண்டியில் இருந்துள்ளதாகவும் அவர்கள்  ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.