செய்திகள்

விபத்துக்குள்ளான யாழ் தேவி – ரயில் போக்குவரத்து பாதிப்பு

பிரதான ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ரயில் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குணுபிடிய பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கண்டெயினர் ஒன்றுடன் யாழ் தேவி ரயில் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.