செய்திகள்

விபத்து – ஒருவர் காயம்

நுவரெலியாவிலிருந்து கொழும்பு சென்ற சிறிய ரக கார் ஒன்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் வைத்து பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயம்பட்டுள்ளார்.

நேற்று  3.30 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த காரில் 4 பேர் பயணித்துள்ளதாகவும் அதில் ஒருவர் காயம்பட்டுள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி வழுக்கியதன் காரணமாகவே இவ்விபத்து நேரந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயம்பட்டவர்க்கு சிறிய காயம் என்பதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பனிமூட்டம் அதிகரிப்பதாகவும் கன மழை பெய்து வருவதனால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதாகவும் இதனால் வாகன சாரதிகளை வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

DSC09287 DSC09294 DSC09299 DSC09305