செய்திகள்

விபத்து – தாயும் மகளும் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல தெலிகம’ பிரதேசத்தில் தனியார் பஸ்சொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்று, 21.05.2015 அன்று காலை 10.30 மணியளவில் பஸ்ஸூடன் மோதியுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி வேகமாக சென்று பஸ்ஸை முந்தி செல்ல முற்பட்ட போதே  இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உடப்புஸ்ஸலாவையிலிருந்து இரத்தினபுரி குருவிட்ட பகுதிக்கு திருமண வீட்டிற்கு சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த வசந்தா குமாரி என்ற 46 வயதான தாயும், ஜீவனி மனீதா என்ற 13 வயதான மகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதுடன், அவர் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் சாரதியை கைது செய்யுள்ளதாக தெரிவித்த கித்துல்கல பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.