செய்திகள்

விபத்து – மாணவன் காயம் – சந்தேக நபர் தப்பியோட்டம்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் 8 வயது மதிக்கதக்க பாடசாலை மாணவன் மஞ்சள் கடவையில் நடந்து சென்ற போது டிக்கோயா பகுதியிலிருந்து மோட்டர் சைக்கிளிள் வந்த ஒருவர் குறித்த மாணவனை மோதி விட்டு அவ்விடத்திலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்மந்தப்பட்ட மாணவன் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

எனினும் சிகிச்சைக்காக குறித்த மாணவனை அட்டனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அட்டன் பொலிஸார் அழைத்து சென்று வைத்திய சிகிச்சை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இவ்விபத்து 10.06.2015 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் அட்டன் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

DSC00206 DSC00208