செய்திகள்

விமல் வீரவன்சவின் பிறந்த திகதியும் மாற்றிப் பதியப்பட்டது: நீதிமன்றில் பொலிஸ் தகவல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் தன்னுடைய தன்னுடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றங்களைச் செய்திருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்கள்.

விமல் வீரவன்ச 1965 மார்ச் 7 ஆம் திகதி பிறந்துள்ள போதிலும், அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் 1970 மார்ச் 7 என மாற்றப்பட்டிருப்பதாக பெலலிஸார் தெரிவித்தனர்.  தன்னுடைய பிறந்த திகதியை கடவுச் சீட்டில் மாற்றிப் பதிந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே விமல் வீரவன்சவின் மனைவி நேற்று கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.