செய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவிக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மணைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் மணைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வைத்தியசாலைக்கு விஜயம் செய்த  நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், விமல் வீரவன்சவின் மணைவியை எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.