செய்திகள்

விமானம் வெடிக்க போவதாக பயணி கூறியதால் ஏர் அரேபியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

ஏர் அரேபியா விமானம் ஒன்று குவைத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த போது பயணி ஒருவர் விமானம் வெடிக்க போவதாக கூறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர் அரேபியா நிறுவனத்தின் ஜீ-9128 விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானம் வெடிக்க போவதாக கத்தினார். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதியின் ராணுவ விமான தளமான அல் மிஹாத் ராணுவ தளத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி அல் மிஹாத் விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் கூறும் போது “விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. தற்போது உயர் அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்கள்.