செய்திகள்

விம்பிள்டன் செரீனா, வாவ்ரிங்கா 3–வது சுற்றுக்கு தகுதி: இவானோவிக் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்(அமெரிக்கா) 2–வது சுற்றில் அங்கோரியைச் சேர்ந்த போபோசை எதிர் கொண்டார்.இதில் செரீனா வில்லியம்ஸ் 6–4, 6–1 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஷரபோவா(ரஷியா), வீனஸ் வில்லியம்ஸ்(அமெரிக்கா) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.முன்னணி வீராங்கனைகளில் ஒருவருமான அனா இவானோவிக்(செர்பியா) 2–வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.7–வது வரிசையில் இருக்கும் அவர் 3–6, 4–6 என்ற கணக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த பெதானியிடம் தோற்றார்.

இதே போல டேனிலா ஹனுட்கோவும்(சுலோவெனியா) தோற்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த வாட்சன் 6–4, 6–2 என்ற நேர்செட் கணக்கில் டேனிலாவை வீழ்த்தினார்.உலகின் 4–ம் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் சாம்பியருமான வாவ்ரிங்கா 2–வது சுற்றில் டொமினிக் குடியரசுவை சேர்ந்த விக்டரை எதிர்கொண்டார்.இதில் வாவ்ரிங்கா 6–3, 6–4, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.