செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், 2 முறை விம்பிள்டன் தொடரைக் கைப்பற்றிய ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், ஜெர்மனி வீரர் டஸ்டின் பிரவுனை எதிர்கொண்டார்.

இதில் ரபேல் நடால் 5-7, 6-3, 4-6, 4-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். ஆப்பிரிக்க நாட்டின் ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்ட பிரவுன் 2010-ம் ஆண்டு ஜெர்மானியராக மாறியவர்.
இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், ”என்னுடைய விளையாட்டு அவரை விளையாட விடாமல் செய்துவிட்டது. அவரால் சீராக விளையாட முடியவில்லை” என்றார்.
14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலை தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடத்தில் கூட இல்லாத பிரவுன் தோற்கடித்ததைக் கண்டு டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.