செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: 4-வது சுற்றில் வாவ்ரிங்கா, ஷரபோவா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பெர்னாண்டோ வெர்டஸ்கோவை (ஸ்பெயின்) எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

வாவ்ரிங்கா அடுத்து பெல்ஜியத்தின் டேவிட் காபினை எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய இளம் வீரர் நிக் கைஜியோஸ் 5-7, 7-5, 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீரர் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்குக்கு அதிர்ச்சி அளித்தார். நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் தாமிக்கை 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார்.