செய்திகள்

விராட் கோலி – அனுஷ்கா சர்மா விரைவில் திருமணம்

உலகக் கோப்பை தோல்விக்கு பின் இந்தியா திரும்பிய விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஜோடி, டெல்லியில் ஒன்றாக சுற்றி திரிந்தனர். டெல்லியில் உள்ள விராட் கோலி வீட்டுக்கு அனுஷ்கா சர்மா சென்றார். அனுஷ்கா சர்மா, கோலி வீட்டுக்கு வருவதை முன்னிட்டு வீட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுரேஷ் ரெய்னா திருமணத்தை தொடர்ந்து, துணை கப்டன் விராட் கோலியும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் விராட் கோலியின் பெற்றோர்களை சந்தித்து அனுஷ்கா சர்மா பேசினார். திருமணம் குறித்து பேசுவதற்காகவே விராட் கோலியின் வீட்டுக்கு அனுஷ்கா சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்திய அணியின் தோல்விக்கு விராட்கோலி – அனுஷ்கா ஜோடி தான் காரணம் என்ற மாயை உருவாக்கப்பட்டு விட்டதால் இனிமேல் அனுஷ்கா தனியாக இருப்பதை விராட் கோலி விரும்பவில்லையாம்.

நாளை டெல்லியில் மற்றொரு இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா திருமணத்தில் விராட் கோலி- அனுஷ்கா ஜோடியாகவே பங்கேற்கின்றனர். அனேகமாக சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து, விராட் கோலியும் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

virad anushka (2)

virad anushka (1)