செய்திகள்

விராட் கோலி, டி வில்லியர்சை யார் என்று கேட்ட ஆஸ்திரேலிய ஸ்பின்னர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா, முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் டி வில்லியர்சை யார் என்று கேட்டு கிரிக்கெட் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியும், புனே அணியும் விளையாடின. இதில் பெங்களூர் அணி வெற்றிப் பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், புனே அணியில் இடம்பெற்றுள்ள தன் சக நாட்டு ஸ்பின்னரான ஆடம் ஜம்பாவுக்கு ஒரு டுவிட் செய்தார்.

கேன் ரிச்சர்ட்சனின் அந்த டுவிட்டில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருக்கும் படத்திற்கு கீழ் “ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் பேட் செய்வதை பார்ப்பது என் அதிர்ஷ்டம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஆடம் ஜம்பா “யார் இவர்கள் இருவரும்?” என்று நக்கலாக கேட்டார். இதனால் கோபமடைந்த கேன் ரிச்சர்ட்சன் “இஷாந்த் சர்மாவை கேட்டுப்பார்” என்று பதில் அளித்தார். பெங்களூர் அணியும், புனே அணியும் விளையாடிய போட்டியில் புனே அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பந்து வீச்சை விராட் கோலியும், டி வில்லியர்சும் துவம்சம் செய்துவிட்டார்கள். இந்த போட்டியில் இஷாந்த் சர்மா 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 47 ரன்களை வாரி வழங்கினார்.

கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஆடம் ஜம்பா தனது டுவிட்டை நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.